ஏப்ரல் - நவம்பரில் நேரடி வரி வருவாய் 6.75 லட்சம் கோடி

தினகரன்  தினகரன்
ஏப்ரல்  நவம்பரில் நேரடி வரி வருவாய் 6.75 லட்சம் கோடி

புதுடெல்லி: நேரடி வரி வசூல் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை 6.75 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 15.7 சதவீதம் அதிகம் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நேரடி வரியாக 6.75 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தை விட 6.75 சதவீதம் அதிகம். இந்த 8 மாதங்களில் 1.23 லட்சம் கோடி ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 20.8 சதவீதம் அதிகம். நடப்பு நிதியாண்டில் நேரடி வரியாக 11.5 லட்சம் கோடி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 48 சதவீதம் வசூலாகியுள்ளது. கடந்த நிதியாண்டிலும் வரி வசூல் அதிகமாகவே இருந்தது. தானாக முன்வந்து வருமான விவரங்களை ஒப்புக்கொள்ளும் திட்டத்தில் 10,833 கோடி வசூல் செய்யப்பட்டது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை