பிரெக்சிட் ஓட்டெடுப்பு தாமதமாகும்: தெரசா மே

தினமலர்  தினமலர்
பிரெக்சிட் ஓட்டெடுப்பு தாமதமாகும்: தெரசா மே

லண்டன்: பிரெக்சி்ட் வரைவு ஒப்பந்தம் மீதான ஒட்டுடெடுப்பு தாமதமாகும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறினார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது தொடர்பாக இங்கிலாந்தில் 2016-ம் ஆண்டுபொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 51.89 சதவீத மக்கள், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிராக 48.11 சதவீத மக்கள் வாக்களித்தனர். இது 'பிரெக்சிட்' என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் பிரெக்சிட் தொடர்பாக வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. பார்லி.யில் தாக்கல் செய்து பிரதமர் தெரசா மே விவாதம் நடத்தினார். இதன் மீதான ஓட்டெடுப்பு இன்று ( டிச.11) நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இ்ந்நிலையில் நேற்று தெரசா கூறியது, இன்று நடக்கவிருந்த ஓட்டெடுப்பு தாமதமாகும் என்றார்.

மூலக்கதை