தன்ஷிகா நடிக்கும் "யோகி டா"

தினமலர்  தினமலர்
தன்ஷிகா நடிக்கும் யோகி டா

ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரிக்கும் படம் "யோகி டா". தன்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார். கபீர் சிங், வில்லனாக நடிக்க, இவர்களுடன் சாயாஜி ஷிண்டே, மனோ பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கவுதம் கிருஷ்ணா இயக்குகிறார். கதாநாயகியை மையப்படுத்தி காதல், ஆக்ஷன் கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது. பூபதி ஒளிப்பதிவு செய்ய, ரஹ்மானின் சகோதரி இஷ்ராத் காதறி இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது.

மூலக்கதை