புகைப்பிடிக்கும் ஹன்சிகா : வைரலான மஹா போஸ்டர்

தினமலர்  தினமலர்
புகைப்பிடிக்கும் ஹன்சிகா : வைரலான மஹா போஸ்டர்

துப்பாக்கி முனை, 100, மஹா என ஹன்சிகா நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. மஹா படம், ஹன்சிகாவிற்கு 50வது படம். அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கிரைம் கலந்த த்ரில்லர் கதையில் மஹா உருவாகி உள்ளது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளன. ஹன்சிகா சாமியார் போன்று உடையணிந்து புகைப்பிடித்தபடி ஒரு போஸ்டரில் உள்ளார். மற்றொன்றில் கண்ணாடியின் முன்பு அவரின் பல விதமான தோற்றங்கள் வெளிப்படுவது போன்று அமைந்திருக்கிறது.

இந்த போஸ்டர் வைரலாகி இருப்பதுடன் இயக்குநர் ஜமீல், ஹன்சிகாவிற்கு இளவரசி என பட்டம் கொடுத்து போஸ்டரிலும் அதை வெளியிட்டுள்ளார். இப்படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மதி தயாரித்துள்ளார்.

மூலக்கதை