மாரி 2 : இளையராஜா பாடிய பாடல் வெளியீடு

தினமலர்  தினமலர்
மாரி 2 : இளையராஜா பாடிய பாடல் வெளியீடு

மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் மாரி 2 உருவாகி உள்ளது. தனுஷ் உடன் சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலட்சுமி, டொவினோ தாமஸ், ரோபோ சங்கர், கல்லூரி வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார்.

மாரி 2, அடுத்தவாரம் வெளியாக உள்ள நிலையில் டிரைலர் மற்றும் ரவுடி பேபி, மாரி கெத்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளன. இப்போது, ஆனந்தி என்ற மூன்றாவது பாடலை வெளியிட்டுள்ளனர்.

தனுஷின் பாடல் வரிகளுக்கு இளையராஜாவும், மனாஸியும் இணைந்து பாடியிருக்கிறார்கள். காதலை சொல்லும் மெலோடியான இப்பாடலுக்கு யுவனின் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளதால் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

#maari2 .. 3rd song .. #maarisaanandhi .. #isaignani https://t.co/r7I8D3Bufl pic.twitter.com/cLNy1CEebd
— Dhanush (@dhanushkraja) December 10, 2018


#maari2 .. 3rd song .. #maarisaanandhi .. #isaignani https://t.co/r7I8D3Bufl pic.twitter.com/cLNy1CEebd
— Dhanush (@dhanushkraja) December 10, 2018

மூலக்கதை