மல்லையா வழக்கில் திருப்பம்: நாடு கடத்த லண்டன் கோர்ட் உத்தரவு

தினமலர்  தினமலர்
மல்லையா வழக்கில் திருப்பம்: நாடு கடத்த லண்டன் கோர்ட் உத்தரவு

லண்டன்: வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் பிரிட்டனில் தங்கி இருந்த மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவரை இந்தியா கொண்டு வர அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கி கடன் மோசடியில் பிரிட்டனில் இருக்கும் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என சி.பி.ஐ., தரப்பில் லண்டன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், எம்மா ஆர்பத்னாட், இந்த வழக்கில் இன்று (10 ம் தேதி ) தீர்ப்பு அளித்தார். இதன்படி மல்லையாவை இந்தியாவுக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் அழைத்து வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மல்லையா 14 நாட்களுக்கு லண்டனில் மேல்முறையீடு செய்யவும் முடியும். இதில் கோர்ட் என்ன மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்கும் என்பதை பொறுத்து காட்சிகள் மாறலாம்.

யார் பணத்தையும் திருடவில்லை ; மல்லையா



லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் பிரபல தொழிலதிபர் ஆஜரானார். கோர்ட்டின் வெளியே நிருபர்களிடம் மல்லையா கூறுகையில்: நான் ஏற்கனவே கடன் தொகையை திருப்பி செலுத்த ஒப்பு கொண்டுள்ளேன். கோர்ட் தீர்ப்பில் என்ன சொல்கிறதோ இதனை ஏற்று கொள்வேன் . என் மீது கூறப்படும் அவதூறுகளை பொய் என நிரூபிப்பேன். இந்தியாவிடம் ஒப்படைப்பது என்பது வேறு கடன் திருப்பி செலுத்துவது என்பது வேறு. இது தொடர்புடையது அல்ல. சட்டத்தின்படி வரும் உத்தரவு மூலம் வங்கிகளில் எனது கடனை திருப்பி செலுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை