வீட்­டுக்­க­டனை அடைப்­ப­தற்­கான சிறந்த வழி எது?

தினமலர்  தினமலர்
வீட்­டுக்­க­டனை அடைப்­ப­தற்­கான சிறந்த வழி எது?

வீட்­டுக்­க­டன் என்­பது நீண்ட கால பொறுப்பு என்­ப­தால், மாதத்­த­வ­ணையை மட்­டும் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கா­மல், கடனை அடைப்­ப­தற்­காக தெளி­வான திட்­ட­மி­ட­லும் இருக்க வேண்­டும்.
ஒரு சிலர், முடிந்த வரை சீக்­கி­ரம் அந்த கடனை அடைத்­து­விட்டு வெளி­யேற வேண்­டும் என்று விரும்­பு­வ­துண்டு. வங்­கி­களும் இதற்­கேற்ப கடனை அடைக்க பல­வி­த­மான வழி­களை அளிக்­கின்­றன:


அதி­க­ரிக்­கும் தவணை


பெரும்­பா­லான வங்­கி­கள், கடன் பெறு­ப­வர்­க­ளின் எதிர்­கால வரு­மான வளர்ச்­சிக்கு ஏற்ப, மாதத்­த­வ­ணையை படிப்­ப­டி­யாக அதி­க­ரிக்­கும் வச­தியை அளிக்­கின்­றன. இந்த முறை­யின் படி, சில ஆண்­டு­கள் கழித்து, வருங்­கால வரு­மான உயர்­வுக்கு ஏற்ப, தவணை அதி­க­ரிக்­கும். இளம்வய­தில் கடன் பெறு­ப­வர்­க­ளுக்கு இது ஏற்­றது.


குறை­யும் தவணை


அதி­க­ரிக்­கும் தவணை முறைக்கு நேர் எதி­ரான முறை இது. கடன் பெற்ற ஆரம்ப ஆண்­டு­களில் தவணை அதி­க­மாக இருக்­கும். பின்­னர் படிப்­ப­டி­யாக அது குறை­யும். அதிக தவணை, அசலை அதி­க­மாக அடைப்­பதை குறிக்­கும் என்­ப­தால் முடிந்த வரை விரை­வாக அடைப்­பது நல்­லது. கடன் அடை­யும் முன் ஓய்வு பெறு­ப­வர்­க­ளுக்கு ஏற்­றது.


வட்டி விடு­முறை காலம்


பல வங்­கி­கள், கடன் ­பெ­று­ப­வர்­க­ளுக்கு மாதத்­த­வணை செலுத்த தேவை­யில்­லாத விடு­முறை
காலத்­தை­யும் அளிக்­கின்­றன. இது, 36 மாதங்­கள் வரை இருக்­க­லாம். ஆனால், இந்த காலத்­திற்கு வட்டி உண்டு. இந்த காலத்­தில் வட்டி மட்­டும் செலுத்­த­வும் தீர்­மா­னிக்­க­லாம்.



வீட்­டுக்­க­டன் வங்கி கணக்கு


பல வங்­கி­கள் வாடிக்­கை­யா­ளர் வங்கி கணக்­கு­டன் இணைந்த வீட்­டுக்­க­ட­னை­யும் அளிக்­கின்­றன. நிலுவையில் உள்ள தொகை­யில் இருந்து, மாதாந்­திர சரா­சரி மீதி தொகையை கழித்து, வட்டி கணக்­கி­டப்­ப­டு­கிறது. இடைப்­பட்ட காலத்­தில் கணக்­கில் பணம் போட­லாம், எடுத்­துக்­கொள்­ள­லாம்.


முழு தொகை


கட்­டப்­பட்டு வரும் வீட்­டிற்­காக கடன் பெறும் போது, வீடு கட்டி முடி­யும் வரை, ஒவ்­வொரு கட்­ட­மாக கொடுக்­கப்­படும் கடன் அள­விற்கு ஏற்ப, வட்டி மட்­டும் செலுத்­தும் வாய்ப்பு உள்­ளது. இதற்கு மாறாக, கடன் பெறத்­து­வங்­கி­ய­துமே, முழு அசல் தொகை மற்­றும் வட்­டிக்­கும் சேர்த்து, தவணை செலுத்த துவங்­க­லாம்.

மூலக்கதை