தொடர் சரிவில் மல்லிகை விலை

தினமலர்  தினமலர்
தொடர் சரிவில் மல்லிகை விலை

சத்தியமங்கலம்:மல்லிகை பூ விலை, தொடர் சரிவால், சத்தியமங்கலம் விவசாயிகள், கவலை அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில், 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மல்லி, முல்லை பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.தீபாவளி பண்டிகை முடிவுக்குப் பின், அவ்வப்போது பெய்த மழையால், விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.அப்போது, 1 கிலோ மல்லிகை பூ, 1,050 ரூபாய் முதல், 1,575 ரூபாய் வரை விற்றது. அதன்பின், 800 ரூபாய், 930 ரூபாய் என சரிந்தது.

பருவமழையால் மீண்டும், 1,050 ரூபாய் வரை உயர்ந்தது.கடந்த, 10 நாட்களாக, கடும் பனிப்பொழிவால், வரத்து சரிந்து, விலையும் குறைந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகை பூ, 360 – 400 ரூபாய், கனகாம்பரம், 300 – 415 ரூபாய், ஜாதிமல்லி, 350 – 400 ரூபாய் வரை விற்றது.சத்தி மார்க்கெட்டுக்கு, 10டன் பூ நேற்று வரத்தானது. இதில், 1 கிலோ மல்லிகை, 280 ரூபாய் முதல், 350 ரூபாய்க்கு விற்றது. முல்லை, 225 – 300 ரூபாய், சம்பங்கி, 20 ரூபாய், ஜாதிமல்லி, 300 ரூபாய், கனகாம்பரம், 250 -300 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர் விலை சரிவால், விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர்.

மூலக்கதை