ஒரே நாளில் மாரி 2, கனா போட்டி, ஆச்சரியத்தில் திரையுலகம்

தினமலர்  தினமலர்
ஒரே நாளில் மாரி 2, கனா போட்டி, ஆச்சரியத்தில் திரையுலகம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வெளியீட்டுக் குழுவின் அனுமதி இல்லாமல் தன்னுடைய மாரி 2 படத்தை டிசம்பர் 21ம் தேதி வெளியிடப் போவதாக தனுஷ் அறிவித்துள்ளார். ஆனால், ஏற்கெனவே தயாரிப்பாளர் சங்கம் சில படங்களுக்கு அன்றைய தினத்தில் படத்தை வெளியிட அனுமதி அளித்திருந்தது. 'அடங்க மறு, பூமராங்க, கனா, சீதக்காதி, சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய படங்கள் அன்று வெளியாக உள்ளன. அந்தப் படங்களுக்கே தியேட்டர்கள் சரியாக கிடைக்குமா என்பது தெரியாத நிலையில் இப்போது 'மாரி 2' படமும் சேர்ந்து கொண்டுள்ளது.

இந்த போட்டியில் திரையுலகத்தில் இரண்டு படங்களின் மோதல்தான் அதிகமாகப் பார்க்கபடுகிறது. டிவியில் தொகுப்பாளராக இருந்து தனுஷ் மூலம் நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நாயகனாக உயர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 'கனா' படமும், தனுஷ் தயாரித்து நடித்துள்ள 'மாரி 2' படமும் டிசம்பர் 21 அன்று போட்டி போட உள்ளன.

தயாரிப்பாளராக தான் தயாரித்துள்ள முதல் படமான 'கனா' படம், தனுஷின் 'மாரி 2' படத்துடன் மோதும் சூழ்நிலை வரும் என சிவகார்த்திகேயன் எதிர்பார்த்திருக்க மாட்டார். இந்த போட்டியின் முடிவு எப்படி இருக்கப் போகிறது என்பது இரண்டு வாரங்களில் தெரிந்துவிடும்.

மூலக்கதை