கலிபோர்னியாவில் விஜய் 63 படப்பிடிப்பு

தினமலர்  தினமலர்
கலிபோர்னியாவில் விஜய் 63 படப்பிடிப்பு

சர்கார் படத்தை அடுத்து தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், யோகிபாபு உள்பட பலர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கியிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது கலிபோர்னியா சென்று லொகேசன் பார்த்து வருகிறார் அட்லீ. அங்கு தான் விஜய் 63 படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் படமாக்கப்படுகிறதாம். அதை உறுதிப்படுத்தும் வகையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ., அர்ச்சனா ஒரு புகைப்படத்தை தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை