ரஜினிக்கு பாடியது மகிழ்ச்சி : எஸ்.பி.பி.

தினமலர்  தினமலர்
ரஜினிக்கு பாடியது மகிழ்ச்சி : எஸ்.பி.பி.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது. ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உள்பட பலர் நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் மரண மாஸ் என்ற சிங்கிள் டிராக் பாடல், கடந்த 3-ந்தேதி வெளியிடப்பட்டது. விவேக் எழுதிய அந்த பாடலை எஸ்.பி.பியுடன் இணைந்து அனிருத்தும் பாடியிருந்தார். ரஜினிக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்ததால் இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

இந்த நிலையில், அந்த பாடல் குறித்து எஸ்.பி.பி., விடுத்துள்ள ஒரு செய்தியில், பேட்ட படத்தில் நான் பாடிய மரண மாஸ் பாடலில் எனக்கான போர்ஷன் கம்மிதான் என்பது எனக்கு தெரியும். என்றாலும் நான் பாடியது ரஜினிகாந்துக்காக என்பதால் வருத்தப்படவில்லை. மாறாக, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை