சுஜா - சிவாஜி தேவ்விற்கு பிரியாணி விருந்தளித்த கமல்

தினமலர்  தினமலர்
சுஜா  சிவாஜி தேவ்விற்கு பிரியாணி விருந்தளித்த கமல்

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டவர் நடிகை சுஜா வருணி. அந்த நிகழ்ச்சியில் ஒருநாள் பேசும்போது, தனது தந்தையின் மறைவை நினைத்து உருக்கமாக பேசி கண் கலங்கினார். அப்போது நான் உன் அப்பா ஸ்தானத்தில் உன்னுடன் இருக்கிறேன் என்று அவருக்கு ஆறுதல் சொன்னார் கமல்.

இந்நிலையில், கடந்த மாதம் 19-ந்தேதி சிவாஜி பேரன் சிவாஜி தேவ் என்கிற சிவக்குமாருக்கும், சுஜா வருணிக்கும் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் அவர்களுக்கு தனது வீட்டில் பிரியாணி விருந்து கொடுத்து உபசரித்துள்ளார் கமல். அந்த புகைப்படங்களை நடிகை ஸ்ரீப்ரியா டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

மூலக்கதை