அனிருத்தை கலாய்த்து மீம்ஸ் போட்ட கங்கை அமரன்

தினமலர்  தினமலர்
அனிருத்தை கலாய்த்து மீம்ஸ் போட்ட கங்கை அமரன்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. இந்த படத்தின் சிங்கிள் டிராக் பாடல் கடந்த 3-ந்தேதி வெளியானது. மரண மாஸ் என்ற அந்த பாடல் ரஜினி ரசிகர்களுக்கிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது.

முன்னதாக ரஜினிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஓப்பனிங் பாடல் பாடியிருப்பதாக சொன்னதால், ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் அந்த பாடலை வரவேற்க தயாரானார்கள். ஆனால் அந்த பாடலின் பெரும்பகுதியை அனிருத்தே பாடியிருந்தார். ரஜினிக்காக எஸ்.பி.பி., சில வரிகள் மட்டுமே பாடுவது போல் இடம்பெற்றிருந்தது.

இதை ரஜினி ரசிகர்கள் கண்டுகொள்ளாத போதும் மற்றவர்கள் எஸ்.பி.பிக்கு குறைவான வரிகளையே கொடுத்தது தங்களுக்கு ஏமாற்றமாக அமைந்ததாக தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, திரைப்பட இயக்குனரும், இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான கங்கை அமரன் அதுகுறித்து தனது கருத்தினை மீம்ஸ் போட்டு அனிருத்தை கலாய்த்துள்ளார்.

அதில் சர்கார் படத்தில் விஜய், சென்னை வருவதை எஸ்பிபியாக சித்தரித்து நான் ரஜினிக்காக ஓப்பனிங் பாடல் பாட வந்தேன் என்றும், அவர் பாட்டை அனிருத்தே பாடிட்டாராம் பா என மீம்ஸ் போட்டுள்ளார்.

அதோடு, என் நண்பர் ரஜினிக்கு, எனது இன்னொரு நண்பர் மீண்டும் பாடப்போகிறார் என்றதும் ஆவலுடன் தான் அந்த பாடலைக் கேட்டேன். சூப்பர் மிக அமர்க்களமாக இருந்தது. ஆனால் முழுப்பாடலையும் எஸ்.பி.பி. பாடியிருந்தால் இன்னும் சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும். அனிருத் தவறாக பாடவில்லை. நன்றாக இருக்கிறது. ஆனால்? என்ற கேள்விக்குறியோடு ஒரு பதிவையும் போட்டிருக்கிறார் கங்கை அமரன்.

மூலக்கதை