பேட்ட பாணியில் ஒடியன் பாடல்

தினமலர்  தினமலர்
பேட்ட பாணியில் ஒடியன் பாடல்

ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் சிங்கிள் டிராக் பாடல் குத்துப்பாடலாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதேப்போல மலையாளத்தில் மோகன்லால் நடித்து, வரும் டிச-14ல் வெளியாகவுள்ள 'ஒடியன்' படத்திலும் இதேபோல பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப்பாடலை மோகன்லாலே பாடியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ள இந்தப்பாடல் நேற்று வெளியாகியுள்ளது. இந்தப்பாடல் படத்தின் நாயகனான ஒடியன் மாநிக்யன் கேரக்டரை விளக்குவதோடு, சிறுவயதில் பள்ளி செல்லும் மாணவர்கள், ஆடிப்பாடி விளையாட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் பின்னணி இசையை சாம்.சி.எஸ் அமைத்துள்ளார்.

மூலக்கதை