பாவனா கேரக்டரை ஞாபகப்படுத்தும் மாரி 2 சாய்பல்லவி

தினமலர்  தினமலர்
பாவனா கேரக்டரை ஞாபகப்படுத்தும் மாரி 2 சாய்பல்லவி

பாலாஜி மோகன் டைரக்சனில் மாரி படத்தின் இரண்டாம் பாகமாக மாரி-2 உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் கதாநாயகியும் வில்லனும் மாறியிருக்கிறார்கள். கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். தமிழில் அவரது முதல் படமான 'தியா'வில் அழுது வழியும் முகத்துடன் நடித்தவர், இந்தப்படத்தில் துறுதுறு குறும்பு பெண்ணாக, ஆட்டோ ட்ரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் ரவுடியான தனுஷை அவர் விரட்டி விரட்டி காதலிக்கிறார் என்பது டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. இதேபோன்ற ஒரு கேரக்டரில் தான் பத்து ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'சோட்டா மும்பை' படத்தில் நடிகை பாவனாவும் ஏற்று நடித்திருந்தார்.

அதில் ஆட்டோ டிரைவராக வரும் பாவனா அந்த ஏரியா தாதாவான மோகன்லாலை காதலிப்பதாகத்தான் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. பாவனாவும் சாய்பல்லவியும் அணிந்துள்ள கூலிங்கிளாஸ் வரை அதை உறுதி செய்வதாகத் தான் இருக்கின்றன. அந்தவகையில் சாய் பல்லவியின் கேரக்டர் பாவனாவை நினைவூட்டுவதாகவே அமைந்திருக்கிறது.

மூலக்கதை