சந்தோஷ் சிவன் படப்பிடிப்பில் மஞ்சு வாரியர் காயம்

தினமலர்  தினமலர்
சந்தோஷ் சிவன் படப்பிடிப்பில் மஞ்சு வாரியர் காயம்

ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் அந்தப்பணியை விட ஒரு இயக்குநராகத்தான் பிசியாக இயங்கிக் கொண்டு இருக்கிறார். மம்முட்டியை வைத்து குஞ்சாலி மரைக்கார் என்கிற படத்தை விரைவில் இயக்கவுள்ள சந்தோஷ் சிவன், அதற்கு முன்னதாக தற்போது காளிதாஸ் ஜெயராம், மஞ்சு வாரியரை வைத்து 'ஜாக் அன்ட் ஜில்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப்படத்தில் மஞ்சு வாரியாருக்கு சில ஆக்சன் காட்சிகளும் இருக்கின்றன. அப்படி ஒரு காட்சியில் நடித்தபோது மஞ்ச வாரியாருக்கு எதிர்பாராத விதமாக தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மஞ்சு வாரியாரின் காயத்தை பரிசோதித்த மருத்துவர்கள் காயத்தின் மீது தையல்கள் போட்டு சிகிச்சை அளித்துள்ளனர். சில நாட்கள் ஒய்வு எடுத்த பின்னரே மஞ்சு வாரியர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மூலக்கதை