உலக கோப்பை ஹாக்கி நெதர்லாந்தை வீழ்த்தியது ஜெர்மனி

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக கோப்பை ஹாக்கி நெதர்லாந்தை வீழ்த்தியது ஜெர்மனி

புவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி போட்டியில், ஜெர்மனி அணி 4-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. பாகிஸ்தான், மலேசியா அணிகள் இடையே நடந்த மற்றொரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டிகள் புவனேஸ்வரில் நடைபெற்று வருகின்றன. 16 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், ‘டி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கியது முதலே ஜெர்மனி அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 13வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி வீரர் வாலென்டின் முதல் கோல் அடித்தார்.

30வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மத்தியாஸ் கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

இந்நிலையில், ஜெர்மனி அணி வீரர்கள் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து அசத்தினர். இதையடுத்து, இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.



இந்நிலையில், தரவரிசையில் 6வது இடம் வகிக்கும் ஜெர்மனி அணி 4-1 என்ற கோல் கணக்கில் 4வது இடத்தில் உள்ள நெதர்லாந்தை வென்றது.   ஜெர்மனி அணிக்கு கிடைத்த 2வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் ெஜர்மனி அணி  காலிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை நெருங்கி விட்டது.

பாகிஸ்தான்- மலேசியா ஆட்டம் டிரா: நேற்று நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் மலேசியா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.

51வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணி வீரர் முகமது கோல் அடித்தார். 55வது நிமிடத்தில் மலேசியா அணி வீரர் பைஜல் பதில் கோல் அடித்தார்.

அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.   இன்று நடைபெறும் போட்டிகளில் ஸ்பெயின்-நியூசிலாந்து, அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.


.

மூலக்கதை