ஐபிஎல் ஏலம் 1003 வீரர்கள் பதிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐபிஎல் ஏலம் 1003 வீரர்கள் பதிவு

புதுடெல்லி: ஐபிஎல் ஏலப் பட்டியலில், 70 இடங்களுக்கு மொத்தம் 1,003 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 12வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் வருகிற 18ம் தேதியன்று ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே பெரும்பாலான வீரர்கள் தக்கவைக்கப்பட்டு விட்டனர். எனவே, 70 வீரர்கள் மட்டுமே ஏலத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.   70 இடத்திற்கு 1,003 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதில், 746 பேர் இந்தியர்கள், 232 பேர் வெளிநாட்டு வீரர்கள். தென்னாப்பிரிக்காவில் இருந்து 59 வீரர்கள், ஆஸ்திரேலியாவில் இருந்து 35 வீரர்கள், ஆப்கானில் இருந்து 27 வீரர்கள் பங்கேற்கின்றனர்.அமெரிக்கா, ஹாங்காங், அயர்லாந்தில் இருந்தும் தலா ஒரு வீரர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 800 பேர் சர்வதேச போட்டி அனுபவம் இல்லாதவர்கள்.

ரஞ்சி கிரிக்கெட்டில் புதிதாக விளையாடி வரும் பீகார் உத்தரகாண்ட், புதுச்சேரி மற்றும்  மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், உத்தரகாண்ட் ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்கள் முதல்முறையாக ஐபிஎல் ஏலப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப்பட்டியலை வருகிற 10ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.  

.

மூலக்கதை