புரோ கபடி லீக் பெங்காலை வென்றது அரியானா

தமிழ் முரசு  தமிழ் முரசு
புரோ கபடி லீக் பெங்காலை வென்றது அரியானா

புதுடெல்லி:  புரோ கபடி லீக் போட்டியில், அரியானா அணி 35-33 என்ற புள்ளிக் கணக்கில் பெங்காலை வீழ்த்தி வெற்றி பெற்றது. புரோ கபடி லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன.

12 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், பெங்கால் மற்றும் அரியானா அணிகள் பலப்பரிட்சை நடத்தின.

போட்டி தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆட்டத்தின் முதல் பாதியில் அரியானா 19, பெங்கால் 12 என்ற புள்ளிகள் பெற்றது.

அரியானா அணி முன்னிலை வகித்த நிலையில், 2வது பாதியில் ஆட்டம் அனல் பறந்தது. கடைசி வரை இரு அணி வீரர்களும் சளைக்காமல் விளையாடியதால், ஆட்டம் பரபரப்பாக இருந்தது. போட்டி முடிவடையும் கடைசி நிமிடத்தில் அரியானா அணி வீரர்கள் அபாரமாக விளையாடி புள்ளிகளை எடுத்தனர்.

இந்நிலையில், அரியானா அணி 35-33 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் அணியை வென்றது. இது, அரியானா அணிக்கு கிடைத்த 6வது வெற்றியாகும்.   இன்று டெல்லியில் நடைபெறவுள்ள போட்டிகளில் அரியானா- உ. பி. , தமிழ் தலைவாஸ்-டெல்லி ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.


.

மூலக்கதை