இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம்

ஜகார்தா: இந்தோனேசியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இந்தோனேசியாவில் உள்ள மேற்கு நுசா தெங்கரா மாகாணம், லம்போக் தீவு பகுதியில், இன்று அதிகாலை 1. 02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 5. 5 ஆக பதிவாகியிருந்தது.

நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் கூடினர்.

சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை