எனக்கு பன்றி காய்ச்சல் இல்லை : சரவணன்

தினமலர்  தினமலர்
எனக்கு பன்றி காய்ச்சல் இல்லை : சரவணன்

வைதேகி வந்தாச்சு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் சரவணன். அதன்பின்னர் பல படங்களில் கதாநாயகனாக நடித்த அவருக்கு, பருத்திவீரன் முக்கிய படமாக அமைந்தது. தொடர்ந்து குணச்சித்ர நடிகராக வலம் வருகிறார்.

சமீபத்தில் இவருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டதாக செய்தி வெளியானது. இதை சரவணன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், சேலத்தில் இருந்த போது காய்ச்சல் இருந்தது. சிகிச்சை எடுத்து விட்டு சென்னை வந்த போதும் காய்ச்சல் குணமாகாததால் இங்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.

குணமாகி வீட்டுக்கு வந்த பின்னர் ஒரு படத்தில் நடித்தும் முடித்துவிட்டேன். ஆனாலும் சிலர் போன் செய்து எனக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாக நலம் விசாரிக்கின்றனர். அப்படி ஒன்றும் இல்லை, அது சாதாரண காய்ச்சல் தான் என கூறியுள்ளார்.

மூலக்கதை