பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: இம்ரான் கான் பேட்டி!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

"பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்’’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளார். 

சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தேவின் சமாதி, பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள கர்தார்பூரில் உள்ளது.  இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் இங்கு புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர். குருநானக்கின் 549வது பிறந்தநாளை முன்னிட்டு, பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் கோயிலில் இருந்து சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள பாகிஸ்தான் எல்லை வரை சாலை அமைக்க மத்திய அரசும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து கர்தார்பூரில் குருநானக் சமாதி வரை சாலை போட பாகிஸ்தானும் முடிவு செய்தன.

இதற்கான அடிக்கல்லை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ரத் கவுர், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இஸ்லாமபாத்தில்  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

கர்தார்பூர் சாகிப் சாலை திட்டத்தை இந்தியாவில் உள்ள பலர் நிச்சயம் பாராட்டுவார்கள் என்பது  எனக்கு தெரியும். இந்தியா உடனான உறவை பலப்படுத்த பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன். 

பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுடன் அமைதியை விரும்புகின்றனர். இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினால், மகிழ்ச்சி அடைவேன். முடியாதது எதுவுமே இல்லை. எந்த விஷயம் குறித்தும் பேச நான் தயாராக இருக்கிறேன்.

காஷ்மீர் பிரச்னைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது. அமைதிக்கான முயற்சி ஒரு பக்கமாக இருக்க முடியாது. இந்தியாவிடம் இருந்து சாதகமான முடிவு ஏற்பட, இந்தியாவில் அடுத்த மக்களவை தேர்தல் முடியும் வரை நாங்கள் காத்திருக்க தயாராக இருக்கிறோம். 


மும்பை தாக்குதல் நடத்திய ஹபீஸ் சயீத்துக்கு எதிராக ஐ.நா ஏற்கனவே தடை விதித்துள்ளது. அவர் அரசின் பிடியில்தான் இருக்கிறார். 

மூலக்கதை