மேகதாது பிரச்சனையை நட்புரீதியாக பேசி தீர்க்கலாம்: முதல்வர் பழனிச்சாமிக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்

தினகரன்  தினகரன்
மேகதாது பிரச்சனையை நட்புரீதியாக பேசி தீர்க்கலாம்: முதல்வர் பழனிச்சாமிக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்

பெங்களூரு: மேகதாது அணை தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார். மேகதாது திட்டம் குறித்து முதல்வர் பழனிச்சாமியுடன் விவாதிக்க கர்நாடக அரசு விரும்புவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால் சந்திக்க நேரம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மேகதாது பிரச்சனையை நட்புரீதியாக பேசி தீர்க்கவே கர்நாடக அரசு விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் மழைக்காலத்தில் மேட்டூரிலிருந்து உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கலாம் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேகதாது விவகாரம் குறித்து தமிழக அரசு மற்றும் தமிழக மக்களுக்கு தவறான புரிதல் உள்ளது. ஆதலால் இது குறித்து பேச நேரம் ஒதுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று மாலை மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க தமிழக அரசு சிறப்பு சட்டசபையை கூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை