கேரளாவில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதுதொடர்பாக இன்று சட்டசபையில் அறிவிப்பு வெளியாகிறது. கேரளாவில் கடந்த 2014ம் ஆண்டு ஆட்டோ, டாக்சி வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டது.

குறைந்தபட்ச கட்டணமாக ஆட்டோவுக்கு 1. 5 கி. மீ. க்கு ரூ. 20 எனவும், டாக்சிக்கு 5 கி. மீக்கு ரூ. 150 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விைல உயர்வால் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து இது குறித்து ஆய்வு நடத்த விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் கடந்த சில மாதங்களுக்கு முன் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது.



அந்த அறிக்கையில் குறைந்த கட்டணமாக ஆட்டோ கட்டணத்தை ரூ. 20ல் இருந்து ரூ. 30 எனவும், டாக்சி கட்டணத்தை ரூ. 150ல் இருந்து ரூ. 200 என உயர்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கட்டண உயர்வு இதுவரை அமல்படுத்தவில்லை.

எனவே கட்டண உயர்வை அமல்படுத்த கோரி போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வாடகை கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி ஆட்டோவுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 20ல் இருந்து ரூ. 25 ஆகவும், டாக்சிகளுக்கு ரூ. 150 ல் இருந்த ரூ. 175 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்றரை கி. மீக்கு மேல் ஒவ்வொரு கி. மீ. க்கும் ஆட்டோவுக்கு ரூ. 10ல் இருந்து ரூ. 13 எனவும், டாக்சிகளுக்கு ரூ. 15ல் இருந்து ரூ. 17 ஆகவும் உயர்கிறது.

இதுதொடர்பாக இன்று கேரள சட்டசபையில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

.

மூலக்கதை