பாபர் மசூதி இடிப்பு தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாபர் மசூதி இடிப்பு தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான இன்று அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள முக்கிய பேருந்து, ரயில், விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், விடுதிகள் ஆகியவற்றில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.    
அயோத்தியில் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயணிகளின் உடமைகளை சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

.

மூலக்கதை