பொதுமக்களுக்காக கேன்டீனில் சமையல் செய்த நடிகை ரோஜா: வைரலாகும் வீடியோ

தமிழ் முரசு  தமிழ் முரசு
பொதுமக்களுக்காக கேன்டீனில் சமையல் செய்த நடிகை ரோஜா: வைரலாகும் வீடியோ

திருமலை: தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களை போன்று ஆந்திராவிலும் அண்ணா கேன்டீன் என்ற பெயரில் மலிவு விலை உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு ரூ. 5க்கு மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராக தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். அதன்படி அண்ணா கேன்டீன் என்ற திட்டத்திற்கு எதிராக, ரோஜா தனது பிறந்த நாளையொட்டி கடந்த மாதம் 17ம்தேதி ஆர். கே.

ரோஜா எனும் அறக்கட்டளை மூலமாக ‘ஒய்எஸ் ராஜன்னா’ கேன்டீன் என்ற பெயரில் நடமாடும் மலிவு விலை உணவகத்தை நகரியில் துவக்கினார்.

மினி லாரி ஒன்றில் செயல்படும் ஒய். எஸ். ராஜன்னா கேன்டீனில் ₹4க்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. இந்த உணவகத்திற்கு பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்பு உள்ளது.

தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒய். எஸ். ராஜன்னா கேன்டீனில் உணவு சாப்பிடுகின்றனர். இந்நிலையில் ரோஜா நேற்று ஒய்எஸ் ராஜன்னா கேன்டீனுக்கு சென்றார்.

பின்னர் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவை அவரே சமைத்தார்.

ரோஜா சமையல் செய்யும் காட்சிகள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

.

மூலக்கதை