கேரளாவுக்கு ரூ3.15 கோடி நிதியுதவி முதல்வர் நாராயணசாமி வழங்கினார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவுக்கு ரூ3.15 கோடி நிதியுதவி முதல்வர் நாராயணசாமி வழங்கினார்

புதுச்சேரி: பெருமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு புதுச்சேரி அரசு நிதி உதவி அளிக்கும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் முதல்வர் அலுவலகத்தில் கேரளா வெள்ள நிவாரண நிதி பெறுவதற்கு தனி பிரிவை தொடங்கி வைத்தார்.

முதல்வர் வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒரு மாத சம்பளம் மற்றும் அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளத்தை அளித்தனர். மேலும், புதுச்சேரி மாநில அனைத்து தரப்பு வியாபாரிகள், தனியார் கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள்,

தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் தாராள மனதுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநில மக்களுக்கு உதவும் நோக்கில் நிதிஉதவியை அளித்தனர்.

பணமாகவும், காசோலையாகவும் வழங்கியதை ஒன்று திரட்டி முதற்கட்டமாக ரூ. 3 கோடியே 15 லட்சத்துக்கான வரைவோலையுடன் (டிடி) முதல்வர் நாராயணசாமி நேற்று கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயனிடம் வழங்கினார்.

.

மூலக்கதை