ஆதார் எண்ணை திரும்பப் பெறும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு

தினகரன்  தினகரன்
ஆதார் எண்ணை திரும்பப் பெறும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு

புதுடெல்லி : ஆதார் எண்ணை திரும்ப பெற்றுக்கொள்ளும் வகையில், ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை இறுதி செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் எனப்படும் தனிப்பட்ட 12 இலக்க அடையாள எண்ணை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்திய தனிப்பட்ட அடையாள ஆணைய அமைப்பு சார்பில் வழங்கப்பட்ட ஆதார் அட்டை பல்வேறு சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆதார் எண்ணை பான்கார்டு, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு, சமையல் கியாஸ் வினியோகம், சிம் கார்டு உள்பட பல்வேறு சேவைகளுடன் இணைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஆதார் அட்டையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் ரகசிய தகவல்கள் கசிந்து விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில் வங்கிக் கணக்குகள், சிம் கார்டுகள் வாங்க ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஆதார் எண்ணை அதன் கூடற்கூறு பதிவுகள், மற்றும் தரவுகளுடன் திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டது.அதன்படி ஆதார் ஆணையம் சில பரிந்துரைகள் செய்து சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. சட்ட அமைச்சகம் அதை பரிசீலித்து, அனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை முக்கிய சேவைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று திருத்தம் செய்தது. இதையடுத்து இந்த பரிந்துரை இறுதி செய்யப்பட்ட பிறகு மத்திய அமைச்சரவையில் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. எனினும் பான் எண் வைத்திருப்போர் மற்றும் புதிதாக வாங்க விண்ணபிப்பவர்கள் மற்றும் இதர சில சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை