இடைத்தரகர் நாடு கடத்தல்: இந்தியாவிடம் தகவல் கேட்கும் பிரிட்டன்

தினமலர்  தினமலர்
இடைத்தரகர் நாடு கடத்தல்: இந்தியாவிடம் தகவல் கேட்கும் பிரிட்டன்

லண்டன்: ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக நாடு கடத்தப்பட்ட இடைத்தரகர், கிறிஸ்டியன் மைக்கேல் குறித்த தகவல்களை அளிக்கும்படி, இந்தியாவிடம் பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.

சிபிஐ காவல்

வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில் நடந்த ஊழல் தொடர்பாக, துபாயில் பதுங்கியிருந்த பிரிட்டனை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐக்கு கோ்ட் அனுமதி வழங்கியுள்ளது.

குடும்பத்தினருடன் தொடர்பு

இது தொடர்பாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: மைக்கேல் கிறிஸ்டியன் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டது முதல், அவரது குடும்பத்திற்கு எங்கள் ஊழியர்கள் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக, அவரது குடும்பத்தினர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். அவர் தற்போது உள்ள சூழ்நிலை குறித்த தகவலை இந்திய அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கோரிக்கை

இந்நிலையில், சிபிஐ கஸ்டடியில் உள்ள கிறிஸ்டியன் மைக்கேலை சந்திக்க அனுமதி கேட்டு, பிரிட்டன் தூதரக அதிகாரிகள் கோரிக்கை அளித்துள்ளனர். இது தொடர்பாக, மத்திய அரசு இன்னும் முடிவை தெரிவிக்கவில்லை.

Download for free from the Store »

மூலக்கதை