நாட்டின் சேவைகள் துறை நான்கு மாதங்கள் காணாத வளர்ச்சி

தினமலர்  தினமலர்
நாட்டின் சேவைகள் துறை நான்கு மாதங்கள் காணாத வளர்ச்சி

புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை, நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, நவம்பரில், மிகச் சிறப்பான வளர்ச்சியை கண்டு உள்ளது.


சாதகமான சந்தை நிலவரம், அதிக அளவில் குவிந்த புதிய, ‘ஆர்டர்’கள் போன்றவற்றால், இத்துறையில் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது என, ‘நிக்கி – மார்கிட்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அதன் விபரம்:நவம்பரில், சேவை நிறுவனங்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, புதிய ஆர்டர்கள் அதிகம் கிடைத்தன; சந்தை நிலவரமும் சாதகமாக இருந்தது.அதனால், சேவைகள்துறை வளர்ச்சியை குறிக்கும், நிக்கி இந்தியா,எஸ்.பி.ஏ.ஐ., குறியீடு,53.7 புள்ளிகளாக உயர்ந்துஉள்ளது. இது, அக்டோபரில், 52.2 புள்ளிகளாக இருந்தது. கடந்த ஜூலைக்கு பின், நவம்பரில் தான், மிக அதிக அளவிலான வளர்ச்சி எட்டப்பட்டு உள்ளது.


மதிப்பீட்டு மாதத்தில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை குறிக்கும், என்.ஐ.சி., –பி.எம்.ஐ.ஓ., குறியீடு, 54.5 புள்ளிகளாக உயர்ந்துஉள்ளது. இது, அக்டோபரில், 53 புள்ளிகளாக இருந்தது.இத்துறைகளில் வேலைவாய்ப்பு தொடர்ந்து, 16 மாதங்களாக அதிகரித்து வருகிறது. மொத்தத்தில், 10 ஆண்டுகளில், இந்தாண்டு தான், வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை