உலக கோப்பை ஹாக்கி இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக கோப்பை ஹாக்கி இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

புவனேஸ்வர்: உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடரில், 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது.

இதில், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ‘பி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்து அணியும் பலப்பரிட்சை நடத்தின.

ஆட்டம் தொடங்கியது முதலே ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் ஜேக்கப் 47வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.

பிளாக் கோவர்ஸ் 50வது நிமிடத்திலும், கோரி வியேர் 56வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

இங்கிலாந்து அணி வீரர்கள் கடைசி வரை கோல் அடிக்காததால், 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.

இது ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்த 2வது வெற்றியாகும். இதற்கு முன் அயர்லாந்தை வென்றிருந்த ஆஸ்திரேலியா காலிறுதிக்குள் நுழைந்தது.   சீனா- அயர்லாந்து அணிகள் இடையே நேற்று நடந்த மற்றொரு போட்டியில், 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

‘டி’ பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஜெர்மனி- நெதர்லாந்து, மலேசியா-பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன.

.

மூலக்கதை