பிரேசில் நாட்டில் இறந்த பெண்ணின் கருப்பை மூலம் முதல்முறையாக குழந்தை பெற்றெடுத்த பெண்

தினகரன்  தினகரன்
பிரேசில் நாட்டில் இறந்த பெண்ணின் கருப்பை மூலம் முதல்முறையாக குழந்தை பெற்றெடுத்த பெண்

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு இறந்த மற்றொரு பெண்ணின் கருப்பை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. அந்த கருப்பையில் உருவான குழந்தை பிறந்து தற்போது நலமாக உள்ளது. மருத்துவ உலகைப் பொறுத்தவரையில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. கருப்பை மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட கருப்பையில், 35 வாரங்கள் மற்றும் மூன்று நாட்கள் இருந்த இந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. மேலும் 2,550 கிராம் எடை கொண்டு இந்த பெண் குழந்தை தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். கருப்பை மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் இதற்கு முன்னர் இது போன்ற முயற்சிகள் 10 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அவ்வாறு பிறந்த குழந்தைகள் எதுவும் உயிர்பிழைக்கவில்லை. தற்போது பிறந்த இந்த குழந்தை ஆரோக்கியமாய் இருப்பதாக லான்சட் மருத்துவ இதழில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கருப்பைப் பிரச்சினைகளால் குழந்தை பெற சிரமப்படும் பெண்களுக்கு இந்த அறுவை சிகிச்சையின் வெற்றி நம்பிக்கை அளிக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மூலக்கதை