சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் கவுதம் கம்பீர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் கவுதம் கம்பீர்

புதுடெல்லி: இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராகவும், தொடக்க ஆட்டக்காரராகவும் சிறந்து விளங்கியவர் கவுதம் காம்பீர்.

37 வயதான இவர் கடந்த 2003ம் ஆண்டில் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 147 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள கவுதம் காம்பீர் 5,238 ரன்கள் குவித்துள்ளார்.

அதிகப்பட்சமாக 150 ரன்களும், 11 சதம், 34 அரை சதம் அடித்துள்ளார்.
58 டெஸ்ட் போட்டியில் விளையாடி 4,154 ரன்கள் எடுத்துள்ள இவர், அதிகபட்சமாக 206 ரன்கள், சதம் 9, அரை சதம் 22 அடித்துள்ளார்.

37 டி-20 போட்டிகளில் விளையாடி 932 ரன்கள் குவித்துள்ளார்.

ரஞ்சி கோப்பை உட்பட உள்ளூர் போட்டிகளில் டெல்லி அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார்.

2007ம் ஆண்டில் நடந்த டி-20 உலக கோப்பை பைனலிலும்(57ரன்), 2011ம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பைனலிலும் (97ரன்) இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர். 2012 மற்றும் 2014 ஐபிஎல் சீசனில் இவரது தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான கவுதம் காம்பீர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.


.

மூலக்கதை