ஜெர்மனியில் 2018 தங்க நாணயங்களால் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்

தினகரன்  தினகரன்
ஜெர்மனியில் 2018 தங்க நாணயங்களால் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்

முயூனிச்: ஜெர்மனி நாட்டின் முயூனிச் (Munich) நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தங்கநாணயங்களால் ஆன கிறிஸ்துமஸ் மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்க நகை வியாபாரி ஒருவர் 10 அடி உயரம் கொண்ட இந்த தங்க மரத்தை உருவாக்கியுள்ளார். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 2018 தங்கநாணயங்களின் எடை 63 கிலோ ஆகும். 2.6 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த மரம் ஐரோப்பாவின் மிக விலை உயர்ந்த கிறிஸ்துமஸ் மரமாகும்.விலையுயர்ந்த இந்த கிருஸ்துமஸ் மரம் 24 மணிநேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த 10 அடி கொண்ட தங்க மரத்தை உருவாக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது என மரத்தை வடிவமைத்தவர் தெரிவித்தனர். இந்த தங்க கிருஸ்துமஸ் மரம் புரோ ஆரம் மியூனிச் கோல்ட்ஹாஸ்-ல் (Pro Aurum’s Munich Goldhaus) பொதுமக்கள் பார்வைக்காக வரும் டிசம்பர் 15-ம் தேதி வரை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை