கிரிக்கெட்டில் இருந்து கவுதம் கம்பீர் ஓய்வு

தினகரன்  தினகரன்
கிரிக்கெட்டில் இருந்து கவுதம் கம்பீர் ஓய்வு

இந்திய அணி முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் (37 வயது), அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டு இந்திய அணியில் (ஒருநாள் போட்டி) அறிமுகமான கம்பீர் இதுவரை 58 டெஸ்ட் போட்டியில் 4154 ரன் (அதிகம் 206, சராசரி 41.95, சதம் 9, அரை சதம் 22), 147 ஒருநாள் போட்டியில் 5238 ரன் (அதிகம் 150*, சராசரி 39.68, சதம் 11, அரை சதம் 34) மற்றும் 37 டி20ல் 932 ரன் (அதிகம் 75, சராசரி 27.41, அரை சதம் 7) விளாசி உள்ளார். ரஞ்சி கோப்பை உட்பட உள்ளூர் போட்டிகளில் டெல்லி அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் தொடரில் எசக்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை பைனலிலும் (57ரன்),2011ம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பைனலிலும் (97ரன்) இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி உள்ளார். 2012 மற்றும் 2014 ஐபிஎல் சீசனில் இவரது தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

மூலக்கதை