நியூசி. 274 ரன்னில் ஆல் அவுட்

தினகரன்  தினகரன்
நியூசி. 274 ரன்னில் ஆல் அவுட்

அபு தாபி: பாகிஸ்தான் அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன் எடுத்து ஆல் அவுட்டானது.ஷேக் சையது ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த நியூசிலாந்து, முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்திருந்தது. ராவல் 45, கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன் விளாசினர். வாட்லிங் 42 ரன், சாமர்வில்லி 12 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். வாட்லிங் ஒரு முனையில் உறுதியுடன் போராட... சாமர்வில்லி 12, அஜாஸ் பட்டேல் 6, டிரென்ட் போல்ட் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.நியூசிலாந்து 116.1 ஓவரில் 274 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. வாட்லிங் 77 ரன்னுடன் (250 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் பிலால் ஆசிப் 5, யாசிர் ஷா 3, ஹசன் அலி, ஷாகீன் ஷா அப்ரிடி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்துள்ளது. ஹபீஸ் (0), இமாம் உல் ஹக் (9), ஹரிஸ் சோகைல் 34 ரன்னில் ஆட்டமிழந்தனர். அசார் அலி 62, ஆசாத் ஷபிக் 26 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை