‘ஜிம் – 2’வில், 200 ஒப்பந்தம்:அதிகாரிகள் நம்பிக்கை

தினமலர்  தினமலர்
‘ஜிம் – 2’வில், 200 ஒப்பந்தம்:அதிகாரிகள் நம்பிக்கை

‘ஜிம் – 2’ என்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில் துவங்க, 200க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் பெறப்படும் என எதிர்பார்ப்பதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழக அரசு சார்பில், வரும் ஜன., 23, 24ம் தேதிகளில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் நடைபெறுகிறது; இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த மாநாட்டில் தொழில் துவங்குவதற்கு, பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்ய முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.


இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:


இரண்டாவது முதலீட்டா ளர்கள் மாநாட்டுக்கான பணிகள், துரிதமாக நடந்து வருகின்றன. தொழில் வழிகாட்டி நிறுவனம், பல்வேறு நாடுகளுக்கு சென்று, தமிழகத்தில் முதலீடு செய்ய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது. மேலும், தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில், முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


இதன் காரணமாக, இந்த மாநாட்டில், 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க ஒப்பந்தம் செய்ய முன்வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


– நமது நிருபர் –

மூலக்கதை