ஐ.எல்., அண்ட் எப்.எஸ்., கடன் தீர்வு இயக்குனர் குழு கைவிரிப்பு

தினமலர்  தினமலர்
ஐ.எல்., அண்ட் எப்.எஸ்., கடன் தீர்வு இயக்குனர் குழு கைவிரிப்பு

மும்பை:‘ஐ.எல்.,அண்ட் எப்.எஸ்., குழுமத்தின், 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பிரச்னைக்கு, ஒட்டுமொத்த தீர்வு சாத்தியமில்லை’ என, உதய் கோட்டக் தலைமையிலான இயக்குனர் குழு, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.


இக்குழு, ஐ.எல்., அண்ட் எப்.எஸ்., கடனுக்கு தீர்வு காண, அர்ப்உட் கேப்பிடல் பிரைவேட் மற்றும் ஜே.எம். பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனங்களை நியமித்துள்ளது.அவை, ‘ஐ.எல்., அண்ட் எப்.எஸ்., பிரச்னைக்கு, அதிக அளவில் பங்கு மூலதனம் மேற்கொள்ளக் கூடிய, முதலீட்டு நிறுவனங்கள் தேவை; அதற்கான வாய்ப்பு இல்லாததால், ஒட்டுமொத்த குழுமத்தின் தீர்வுக்கு சாத்தியமில்லை.


‘அதேசமயம், குழுமத்தில், ஒரே வர்த்தகத்தை சார்ந்துள்ள நிறுவனங்களின் சொத்துகள் மூலமாகவும், பங்கு மூலதன வழியிலும், பல கட்டங்களாக தீர்வு காணலாம்’ என, தெரிவித்துள்ளன.இதை, உதய் கோட்டக் குழு, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் அளித்த இரண்டாவது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


அதில், ‘ஆலோசனை நிறுவனங்களின் பரிந்துரைப்படி, ஐ.எல்., அண்ட் எப்.எஸ்., குழுமத்தில், கல்வி, தொழில்நுட்பம், மின்சாரம், நீர் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் உள்ள நிறுவனங்களில், குறிப்பிட்ட பங்குகள் விற்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை