பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வருமானவரி தாக்கல் உயர்வு

தினமலர்  தினமலர்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வருமானவரி தாக்கல் உயர்வு

புதுடில்லி:‘‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், நடப்பு, 2018 -– 19 வரி மதிப்பீட்டு ஆண்டில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை, 50 சதவீதம் உயர்ந்து, 6.08 கோடியாக அதிகரித்துள்ளது,’’ என, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர், சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறியதாவது:நடப்பு நிதியாண்டில், நேரடி வரிகள் மூலம், 11.5 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மொத்த நேரடி வரி வசூல் வளர்ச்சி, 16.5 சதவீதமாகவும், நிகர நேரடி வரி வசூல் வளர்ச்சி, 14.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இது, பணமதிப்பு நீக்கத்தால், வரி செலுத்துவோர் எண்ணிக்கை, வசூல் ஆகியவை அதிகரித்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது.


கடந்த ஆண்டு, வரி செலுத்தும் நிறுவனங்கள் எண்ணிக்கை, 7 லட்சத்தில் இருந்து, 8 லட்சமாக உயர்ந்துள்ளது.விரைவில், நான்கு மணி நேரத்தில், வருமான வரித் துறை அளிக்கக்கூடிய, ‘இ – பான்’ எனப்படும் வருமான வரி கணக்கு எண் வழங்கும் திட்டம் அறிமுகமாக உள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத, இரண்டு லட்சம் பேருக்கு, விளக்கம் கேட்டு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது. இதில், பொருந்தாத கணக்கு விபரங்களை தாக்கல் செய்தோரும் அடங்குவர்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை