ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி  டிரம்ப் சந்திப்பு

பியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் அபே ஆகியோர் சந்தித்து பேசினர். ஜி-20 உச்சி மாநாடு அர்ஜென்டினாவின் பியூனஸ் ஏர்ஸில் நேற்று தொடங்கியது. ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம் சென்ற பிரதமர் மோடி, இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசினார். ‘அமைதிக்கான யோகா’ என்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.



அப்போது பேசிய மோடி, ‘‘உடல் நலம், மன அமைதியை பெறுவதற்காக உலகிற்கு இந்தியா வழங்கியிருக்கும் பரிசுதான் யோகா. இது, ஆரோக்கியம், மகிழ்ச்சியின் மூலம் நம் இரு நாடுகளையும் இணைக்கிறது.

ஜி-20 மாநாட்டில், உலக பொருளாதாரம், நிலையான வளர்ச்சி, பருவநிலை மாற்றம், பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். இவை ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களாகும்’’ என்றார்.



இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி, சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள், வர்த்தக மேம்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், மோடி, ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டர்சை சந்தித்து பேசினார். மாநாட்டில் முதன்முறையாக அமெரிக்கா, ஜப்பான், இந்தியா முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் அபே ஆகியோர் சந்தித்து பேசினர். தீவிரவாத தடுப்பு, முக்கிய துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

சீன அதிபர் ஜின்பிங்கையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இன்று நடைபெற்ற மாநாட்டில், ஜி-20 நாடுகளுக்குள் இடையே நிலையான வளர்ச்சிக்கான ஒருமித்த கருத்தை உருவாக்குதல் குறித்த விவாதிக்கப்பட்டது.

.

மூலக்கதை