உலக அளவில் ஊட்டச்சத்து மிகவும் குன்றிய குழந்தைகள் உள்ள நாடுகளில் இந்தியா முதலிடம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

உலக அளவில் ஊட்டச்சத்து மிகவும் குன்றிய குழந்தைகள் உள்ள நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 

ஊட்டச்சத்து என்ற வார்த்தை நமக்கு புதிதல்ல. ஆனால், அந்த ஊட்டச்சத்தின் அவசியத்தையும் அதன் ஆழமான அர்த்தத்தையும் நாம் உணர்ந்திருக்கவில்லை. வளர்ச்சி, உற்பத்தி, பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக தேசிய மேம்பாட்டுக்கு வழிவகுப்பது ஆரோக்கியம்.

இந்த ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது ஊட்டச்சத்து. இந்தியாவில் 4.66 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் உள்ளனர் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. 

அவ்வகையில் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இந்த ஆண்டிற்கான சர்வதேச ஊட்டச்சத்து அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் உலக அளவில் ஊட்டச்சத்து மிகவும் குன்றிய குழந்தைகளில் மூன்றில் ஒன்று இந்தியாவைச் சேர்ந்த குழந்தையாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 150.8 மில்லியன் குழந்தைகளுள் 46.6 மில்லியன் குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர், அதாவது கிட்டத்தட்ட 3ல் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்ததாகும் என்று அறிக்கை கூறியுள்ளது. 

தசைச்சிதைவு நோய்க்கு ஆளான குழந்தைகள் 5.05 கோடி எனவும் இந்தியாவில் மட்டும் இந்த நோயினால் 2.55 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்குப் பின் நைஜிரியாவில் 1.39 கோடி குழந்தைகளும் பாகிஸ்தானில் 10.7 கோடி குழந்தைகளும் இந்த குறைபாட்டினால் அவதிப்படு கின்றன எனவும் இந்த மூன்று நாடுகளிலும்தான் உலகின் 47% வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் உள்ளன எனவும் இந்த அறிக்கை கூறுகிறது. 

உலகளாவிய பட்டினி அட்டவணையில் 119 நாடுகளில் இந்தியா 100 வது இடத்தில் இருந்தது. உணவு உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். ஆனால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், ஐந்து குழந்தைகளுக்கு, ஒரு குழந்தை, உயரத்திற்கு குறைவான எடையில் இருக்கிறது.

இதன் காரணமாக இந்தியா ஒரு “அபாயமான கட்டத்தில்” உள்ளது என்று ஒரு அறிக்கை கூறியது. உலக சுகாதார நிறுவனத்தின் அளவுகோலின்படி, ஒரு குழந்தை அதன் உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இல்லாமல் இருந்தாலோ, அல்லது மிகவும் மெலிந்து காணப்பட்டாலோ, உள்ளங்கால்கள் வீக்கம் கண்டிருந்தாலோ அக்குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.ஊட்டச்சத்து குறைபாடுக்கு வறுமையும், உணவு பாதுகாப்பின்மையும் முக்கிய காரணிகள் அல்ல என்று ஆய்வுகள் சொல்கின்றன.

மூலக்கதை