ரயில் 18-க்குப் பிறகு அதிநவீன தொழில்நுட்பத்துடன் தேஜஸ் ரயில் பெட்டிகள் நாட்டிற்கு அர்ப்பணிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ரயில் 18க்குப் பிறகு அதிநவீன தொழில்நுட்பத்துடன் தேஜஸ் ரக ரயில் பெட்டிகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த ரயில் சென்னை எழும்பூர் முதல் மதுரை வரை இயக்கப்படுகிறது.  சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) நவீன தொழில் நுட்பத்துடன் தேஜஸ் ரக ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. 

முதற்கட்டமாக 23 அதிநவீன தேஜஸ் ரக பெட்டிகள் தயாரிக்கப்பட்டது. இந்த 23 பெட்டிகளில், இருக்கை வசதி கொண்ட 14 ஏ.சி. பெட்டிகளும், 2 முதல் தர இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஆகும். 

இந்த பெட்டிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஐ.சி.எப். பொது மேலாளர் சுதான்சி மணி தலைமை தாங்கினார். ஐ.சி.எப். மூத்த ஊழியர் அன்பழகன் கொடியசைத்து ரயில் பெட்டிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

பின்னர் ஐ.சி.எப். பொது மேலாளர் சுதான்சு மணி நிருபர்களிடம் கூறியதாவது: 

ரயில் 18க்கு பின்பு, அடுத்த படியாக ஐ.சி.எப்.பில் அதிநவீன தேஜஸ் ரக பெட்டிகள் தயாரித்து நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த அதிநவீன தேஜஸ் பெட்டிகள் தெற்கு ரயில்வேக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. தேஜஸ் பெட்டிகள் விரைவில் சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை