வங்கி மோசடிகளை தடுக்க அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட அருண்ஜெட்லி அறிவுறுத்தல்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: வங்கி மோசடிகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நிதியமைச்சர் அருண்ஜெட்லி வலியுறுத்தியிருக்கிறார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தொழிலதிபர்கள் மரபை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டது துர்யஷ்டவசமானது என்று கூறியுள்ளார். வங்கி மோசடிகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விழிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாக அருண்ஜெட்லி தெரிவித்திருக்கிறார். வங்கி மோசடி பொருளாதார சீர்திருத்தம் மற்றும் எளிதாக தொழில்துவங்குவதற்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வரவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேவைப்பட்டால், சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று ஜெட்லி கூறியுள்ளார்.வங்கி மோசடி குறித்து நிதியமைச்சகத்து தெரியவி்ல்லை என்பதை நம்ப முடியவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபில் கூறியுள்ளார். வங்கி மோசடிகளுக்கு அதிகாரிகள் மட்டும் பழிபோடக்கூடாது என்று அவர் தெரிவித்திருக்கிறார். வங்கிகளை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் பிரதிநிதி யார் என்று அருண்ஜெட்லிக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் கடனாக பெற்று மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிவிட்டனர். இதேபோன்று வங்கி மோசடிகள் குறித்து தினமும் செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து அருண்ஜெட்லியின் விளக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

மூலக்கதை