பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மக்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மக்கள்!

 

ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த ஏராளமானோர் பிரித்தானியாவை விட்டு வெளியேறி வருவதற்கு பிரெக்சிட் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
கடந்த பத்தாண்டுகளில் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த சுமார் 130,000 பேர் பிரித்தானியாவை விட்டு வெளியேறி உள்ளார்கள் என்று Office for National Statistics தெரிவித்துள்ளது.
 
அதே புள்ளிவிவரம் பிரித்தானியாவுக்குத் திரும்பும் பிரித்தானியர்களின் எண்ணிக்கையை விட பிரித்தானியாவை விட்டு வெளியேறும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் தெரிவிக்கிறது.
 
பிரித்தானியாவுக்கு வரும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தவர்களில் வெகு சிலரே வேலை தேடி வருகிறார்கள்.
 
இதற்கு மாறாக ஐரோப்பிய யூனியனைச் சேராதோர் அதிகம்பேர் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வதால் பிரித்தானிய மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 
ஐரோப்பிய யூனியனைச் சேராதோர் சுமார் 285,000 பேர் கடந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான 12 மாதங்களில் பிரித்தானியா வந்துள்ளனர். 80,000 பேர் வெளியேறியுள்ளனர்.
 
இப்படி மக்கள் வெளியேறுவதற்கு பிரெக்சிட்டைத் தவிர வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா?
 
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தோர் பிரித்தானியாவில் வரவேற்கப்படவில்லை என்னும் எண்ணம் காரணமா?
 
தங்கள் எதிர்காலத்தைக் குறித்த நிலையில்லாத்தன்மை காரணமா அல்லது பிற ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் வலுவடைந்து வருவது காரணமா?
 
எப்படியானாலும் பிரித்தானியாவை விட்டு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் வெளியேறி வருகின்றார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
 

 

மூலக்கதை