சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மைசூரு வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு

தினகரன்  தினகரன்

மைசூரு: சட்டப்பேரவை தேர்தலின்போது பயன்படுத்தும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மைசூருவுக்கு கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெறும் எனவும், தேர்தல் அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க மைசூரு மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னேற்பாடுகளையும் தீவிரமாக செய்துள்ளது. மைசூரு மாவட்டத்தில் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.  3600 வாக்குப் பதிவு இயந்திரங்கள் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 3500 வி.வி.பாட்  இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்குத் தேவையான பொருட்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதனை மாவட்ட அதிகாரிகள் சரிபார்த்தனர். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.  40 சதவீதம் வி.வி.பாட் இயந்திரங்கள் தேர்தலின்போது பெறப்படும் என்று தெரிவித்த மாவட்ட கலெக்டர் ரணதீப், அந்தந்த பகுதிகளுக்கு தேர்தலுக்கு முன்தினம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறினார்.

மூலக்கதை