ராஜஸ்தான் சட்டப்பேரவை கட்டிடத்தில் பேய்களை விரட்ட எம்எல்ஏக்கள் பிரத்தேக பூஜை

தினகரன்  தினகரன்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் சட்டப்பேரவை கட்டிடத்தில் பேய்கள் நடமாடுவதாக பீதி அடைந்துள்ள எம்எல்ஏக்கள் அவற்றை விரட்ட பூஜைகளை நடத்தி முடித்துள்ளனர். 200 எம்எல்ஏக்களை கொண்ட இந்த பேரவையின் உறுப்பினர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பதும் ராஜினாமா செய்வதும் குற்ற வழக்குகளில் சிறை செல்வதும் அண்மை காலமாக அரங்கேறி வருகிறது. இதற்கு ஜெய்ப்பூரில் உள்ள சட்டப்பேரவை கட்டிடத்தில் உள்ள துஷ்டசக்திகள் தான் காரணம் என எம்எல்ஏக்கள் நம்புகின்றனர். 2001ம் கட்டிமுடிக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்துள்ள இடம் முன்னர் சுடுகாடாக இருந்ததாகவும் அங்கு உளவிய ஆவிகள் தற்போது சட்டபேரவையில் திரிவதாகவும் எம்எல்ஏக்கள் நம்புகின்றனர். இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க முடிவு செய்த பாஜக எம்எல்ஏக்கள், முதலமைச்சர் வசுந்தரா ராஜேவிடம் முறையிட்டு, பேய்களை விரட்ட பிரத்தேக பூஜைகளை நடத்தி உள்ளனர். 

மூலக்கதை