மேலும் ஒரு நகைக்கடை அதிபரின் வங்கி மோசடி அம்பலம்: ரூ.390 கோடி ஏமாற்றியவர்கள் மீது சிபிஐ வழக்கு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி பானியில் ஓரியண்டல் வங்கியிலும் ரூ.390 கடன் கோடி மோசடி செய்து விட்டு வைர நகைக்கடை வியாபாரிகள் 2 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மோசடி ஈடுபட்டவர்கள் டெல்லி துவாரகா தாஸ் சேத் இண்டர்நேஷனல் என்ற வைரம், நகைகள் தயாரித்து விற்கும் நிறுவனத்தை நடத்தி வந்த சப்யா சேத் மற்றும் ரீடா சேத் ஆவர். ஓரியண்டல் வங்கி நடத்திய புலணாய்வு விசாரணையில் துவாரகா தாஸ் சேத் இண்டர்நேஷனல் நிறுவனம் கடன் வசூலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வங்கி நிர்வாகம் சார்பில் கடந்த ஆகஸ்டு மாதம் சிபிஐயிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் புகாரின் பேரில் கடந்த வியாழன் அன்று துவாரகா தாஸ் சேத் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் இயக்குநர்கள் அனைவர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால் வழக்கில் தொடர்புடைய அனைவரும் வெளிநாடு தப்பிச் சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் கடன் உறுதி அளிப்புக் கடிதம் மூலம் ஓரியண்டல் வங்கியில் கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

மூலக்கதை