பெரியம்மா ஆனார் காஜல் அகர்வால்

தினமலர்  தினமலர்
பெரியம்மா ஆனார் காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். விமல் நடித்த இஷ்டம் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு படவாய்ப்புகள் இல்லாததால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கரண் வலேச்சா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

கர்ப்பமாக இருந்து வந்த நிஷா அகர்வாலுக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்வு நடந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு நிஷா அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு இஷான் வலேச்சா என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த தகவலை காஜல் அகர்வால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு பிறந்த குழந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவையும் வெளியிட்டிருக்கிறார். இதன்மூலம் காஜல் அகர்வால் பெரியம்மாகி உள்ளார்.

மூலக்கதை