திரைப்பட விழாவில் அனுமதிக்கப்படாத செக்ஸி துர்கா சென்சாரில் தப்பிய அதிசயம்..!

தினமலர்  தினமலர்
திரைப்பட விழாவில் அனுமதிக்கப்படாத செக்ஸி துர்கா சென்சாரில் தப்பிய அதிசயம்..!

மலையாளத்தில் உருவாகியுள்ள 'செக்ஸி துர்கா' படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னென்ன பிரச்னைகளை சந்திக்க வேண்டுமோ அதைவிட அதிகமாகவே சந்தித்துவிட்டது.

இந்தப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்தும், இந்தியன் பனோராமா அங்கீகரித்தும், கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திடீர் தலையீட்டால் கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழா((IFFI))வில் திரையிட இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சென்சார் போர்டு இந்தப்படத்திற்கு சான்றிதழ் வழங்கும்போது செக்ஸி துர்கா என்கிற டைட்டிலை எஸ் துர்கா (S DURGA) என மாற்றும்படி குறிப்பிட்டதாம். இதை காரணம் காட்டி, தங்களிடம் இருந்து மறு சான்றிதழ் கிடைக்கும் வரை எந்த விழாக்களிலும் படத்தை திரையிடக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

தற்போது ஒருவழியாக ரிவைசிங் கமிட்டிக்கு சென்று ஒரு இடத்தில் கூட வெட்டு வாங்காமல் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது இந்தப்படம். அதேசமயம் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் சில வார்த்தைகளை மியூட் செய்ய சொன்னதுடன், படத்தின் டைட்டில் 'எஸ் துர்கா' (S DURGA) என்றே இடம்பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது இந்தப்படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருக்கிறார் இயக்குனர் சனல்குமார் சசிதரன்.

மூலக்கதை