மோகன்லால் - நிவின்பாலி படத்தில் துல்கரின் நண்பர்

தினமலர்  தினமலர்
மோகன்லால்  நிவின்பாலி படத்தில் துல்கரின் நண்பர்

கேரளாவில் பிரசித்தி பெற்ற 'காயம்குளம் கொச்சுன்னி' என்கிற கொள்ளையனை மையமாக வைத்து அதே பெயரில் உருவாகி வரும் படத்தில் டைட்டில் கேரக்டரில் நிவின்பாலி நடித்து வருகிறார். 36 வயதினிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிவரும் இந்தப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் மோகன்லாலும் சமீபத்தில் தான் இணைந்து நடித்து வருகிறார்.

இந்தநிலையில் துல்கர் சல்மானின் நண்பரும் அவருடன் பல படங்களில் இணைந்து நடித்தவருமான நடிகர் சன்னி வெய்ன் இப்போது இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். இந்தப்படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என தெரிகிறது. எண்பதுகளின் காலகட்டத்தில் நடக்கும் இந்தக்கதையில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார்.

மூலக்கதை